ஹிட்லரின் மலை மாளிகையில் பயங்கர தீ விபத்து..!

Estimated read time 1 min read

ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் தொடர்புடைய ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

1938-ல் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் போராடினர். பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் கடினமான மலைப்பாதையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. தீ விபத்து தொடர்பாக 33 வயது நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவில், அடால்ப் ஹிட்லரின் மலைவாழ் இல்லமான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயது ஜெர்மானியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பவேரியாவின் ட்ரான்ஸ்டைன் பகுதியில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் கட்டிடத்தில் தீப்பற்றியதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.சுமார் 200 பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று அதிகாலையிலும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. மலைப்பகுதியில் கடினமான நில அமைப்பு காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 33 வயது நபரை போலீசார் பிடித்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்களுக்குத் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என்று போலீஸ் அதிகாரி கெர்ஹார்ட் ஹோல்சிங்கர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author