செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்டது.
இந்த அறிவிப்புடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 அன்று பரிசீலனை நடைபெறும். வேட்பாளர்கள் ஆகஸ்ட் 25 வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
முன்னதாக, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எதிர்பாராத விதமாக ராஜினாமா செய்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2027 வரை இருந்த நிலையில், அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் ராஜினாமா செய்திருந்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
