சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 1ஆம் தேதி ரஷிய வெளியுறவு அமைச்சர் லவ்லோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

வாங் யீ கூறுகையில், சீனா மற்றும் ரஷியாவின் முயற்சியுடன் ஐ.நா. பாதுகாப்பவை தற்போதைய ஈரான் நிலைமை பற்றி நேற்று அவசர கூட்டத்தை நடத்தியது. ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஒரு நாட்டின் தலைவரைக் கொலை செய்து, ஆட்சி மாற்றத்தைத் தூண்டியதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்த செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளையும் மீறியுள்ளன என்று குறிப்பிட்டார்.

இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்துவது, பேச்சுவார்த்தைக்கு கூடிய விரைவில் திரும்புவது, ஒருசார்பு நடவடிக்கையை கூட்டாக எதிர்ப்பது ஆகியவை சீனாவின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

லவ்லோவ் கூறுகையில், சீனாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா ஒத்துப்போகிறது. சீனாவுடன் இணைந்து தொடர்புகளை வலுப்படுத்த விரும்புகிறது என்றும், ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட தளங்களின் மூலம் தெளிவான சமிக்கையை வெளிக்காட்டி, உடனே போரை நிறுத்தி தூதாண்மை ரீதியான பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author