நிர்வாகச் செயல்திறன் பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்திருந்த முக்கிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, நிர்வாகச் செயல்திறன் பற்றிய சரியான கருத்தை நிலைநாட்டி செயல்படுத்துவது என்ற தலைப்பில், ஏப்ரல் 1ஆம் தேதி ஜுயூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.
நிர்வாகச் செயல்திறன் பற்றிய கருத்தானது, பொது நலத்துக்காகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு மக்களுக்காகவே ஆட்சிபுரிவது என்ற கோட்பாட்டுடன் தொடர்புடையது. சிறந்த நிர்வாகச் செயல்திறனுடன் கட்சி மற்றும் நாட்டின் லட்சியத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றி, பொது மக்களுக்கு நன்மை புரிந்தால்தான், கட்சியின் கோட்பாட்டை சீராக செயல்படுத்தி கட்சியின் வரலாற்று ரீதியான கடமைகளை நிறைவேற்ற முடியும். உண்மையை அடிப்படையாகக் கொண்டு விதிகளின்படி செயல்பட்டு, அறிவியல் பூர்வமான முடிவு மற்றும் கடும் உழைப்பு மூலம், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
