சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பு நிகழ்வு அண்மையில் கெய்ரோ நகரில் துவங்கியது. “சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பதில் கடிதங்கள்”, “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” உள்ளிட்ட சுமார் 10 நிகழ்ச்சிகள், எகிப்து தேசிய தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படுகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவர், சீன ஊடகக் குழுமத்தின் பொது இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் துவக்க விழாவில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், இவ்வாண்டு, சீன-எகிப்து தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். சீன ஊடகக் குழுமம், சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பு நிகழ்வை வாய்ப்பாக கொண்டு, எகிப்தின் ஊடகங்களுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சீன-எகிப்து பண்பாட்டுப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஆழமாக்க விரும்புவதாகவும், இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்தி, மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
