சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 21ஆம் நாள், அழைப்பின் பேரில், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வாடெஃபுலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
வாங்யீ கூறுகையில்,
சீனாவும் ஜெர்மனியும், உலகின் முக்கிய பொருளாதார நாடுகளாகவும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. சீன-ஜெர்மன் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இரு தரப்புகளின் நன்மைக்குப் பொருந்தியது. இது, சரியான கூட்டுத் தேர்வாகும் என்றார். மேலும், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளிகளாகும். பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம், தத்தமது கவலைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் சீனா ஊன்றி நின்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி ஆக்கப்பூர்வமாக பங்காற்றி, தாராள வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஊன்றி நிற்பதை விரைவுபடுத்தி, திறப்பு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு என்ற நேர்மறையான பாதையில் நடைபோட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாடெஃபுல் கூறுகையில்,
சீனாவுடன் இணைந்து, உயர் நிலை பரிமாற்றத்தை மேலும் நெருக்கப்படுத்தி, ஜெர்மனி-சீன உறவின் நிலையைத் தொடர்ந்து மேம்படுத்த ஜெர்மனி எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது. இதற்கு ஜெர்மனி ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் என்றார்.
ஈரான் நிலைமை, உக்ரேன் நெருக்கடி முதலியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
