உலகின் வளரும் நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சீனா

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில், 5ம் நாள் தொடர வல்ல வளர்ச்சி, பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

இக்கவுன்சிலின் 61வது கூட்டத்தில் பங்கெடுத்த சீனப் பிரதிநிதிக் குழு துணை தலைவர் லீ ஷியோமே அம்மையார், சீனாவின் கருத்துக்களை விளக்கிக் கூறினார்.

அவர் கூறுகையில், உலகின் வளர்ச்சிக்கு சீனா முயன்றளவில் பங்காற்றி வருகிறது. சீனா முன்வைத்த உலக வளர்ச்சி பற்றிய முன்மொழிவின் கீழ், உலகின் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்டும் விதம், 2300 கோடி டாலருக்கும் அதிகமான நிதித்தொகை திரட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கவுன்சிலில் பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமைகள், மனித உரிமைகள் முன்னெடுப்பு முதலியவை தொடர்பான தீர்மானங்களை சீனா முன்வைத்து, பல்வேறு தரப்புகளின் நலன் தரும் பரஸ்பர ஒத்துழைப்புக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author