வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
கௌஹாத்தி – ஹவுரா இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், பயண முன்பதிவு முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.
இந்த ரயிலில் ஆர்.ஏ.சி (RAC) எனப்படும் உறுதிப்படுத்தப்படாத டிக்கெட் முறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு இருக்கையை பகிர்ந்து பயணிக்கும் வசதி இதில் கிடையாது; உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பகுதி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இதில் அனுமதி இல்லை.
மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்:டிக்கெட் முன்பதிவு விதிகள், கட்டண விபரங்கள்
