இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் தன்மையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளது (Committed)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், திருத்தப்பட்ட புதிய அறிக்கையில் “வாங்க உத்தேசித்துள்ளது(Intends)” என அந்த வார்த்தை மென்மையாக்கப்பட்டுள்ளது.
இது கட்டாய கொள்முதல் அல்ல என்பதைக் குறிக்கிறது.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை
