மத்திய கிழக்கு போரின் ஒரு பகுதியாக, ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர்க்கவும், பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்கவும் இந்தியா கடந்த இரு தசாப்தங்களாக பார்த்துப் பார்த்து செதுக்கிய ஒரு மூலோபாயக் கனவுத் திட்டத்தின் மீதே இந்தத் தாக்குதல் தற்பொழுது நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய கள நிலவரப்படி இந்தியா எடுத்துள்ள சில ராஜதந்திர நகர்வுகள் காரணமாக, இந்த தாக்குதலால் இந்தியாவிற்கு உடனடி பொருளாதார இழப்புகள் ஏதும் இல்லை என்றாலும், நீண்ட கால உத்திகளுக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
ஈரானின் சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; இந்தியாவின் Rs.1,000 கோடிக் கனவுத் திட்டம் சிதறுகிறதா?
