சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமான AI 180 இல் நடந்த ஒரு அதிர்ச்சியான ‘கரப்பான்பூச்சி’ சம்பவத்திற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
பயணிகள் விமான பயணத்தின் நடுவில் கரப்பான் பூச்சிகளைக் கண்டதாகக் கூறியதை அடுத்து, அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பயணத்தின் போது இரண்டு பயணிகள் “சில சிறிய கரப்பான் பூச்சிகள்” இருப்பதாக புகார் அளித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, கேபின் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிகளை அதே கேபினில் உள்ள மற்ற இருக்கைகளுக்கு மாற்றினர்.
சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் களேபரம்
