சீனாவுடனான ஒத்துழைப்புக்கு 57 விழுக்காடு அமெரிக்கர்கள் ஆதரவு

சீனாவுடன் நட்பார்ந்த ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என்று 57 விழுக்காடு அமெரிக்கர்கள் கருதுவதாக அமெரிக்காவின் உலகளாவிய விவகாரத்துக்கான சிகாகோ கவுன்சில் செப்டம்பர் 21ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிலிருந்து சீனாவுடனான தொடர்புக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கர்கள் அதிகரித்து வரும் போக்கை இது நிலைநிறுத்தியுள்ளது.

இக்கவுன்சில் 2025ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, சீனாவுடன் தொடர்பு மேற்கொள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஆதரவளிக்க விரும்பினர். புதிய ஆய்வின்படி, குடியரசு கட்சி உறுப்பினர்களும் இத்திசையை நோக்கி மாறி வருகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author