திமுக இளைஞரணி கூட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறும்..!

Estimated read time 1 min read

சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Aஇந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5 ஆம் தேதிக்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்த நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23 ஆம் தேதி நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோல்வி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அந்த அறிக்கை திமுக தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் மே 23 ஆம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author