தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனில்,சீன நிறுவனமான UBTech தனது சொந்த பேட்டரிகளை தன்னியக்கமாக மாற்றக்கூடிய உலகின் முதல் மனித உருவ ரோபோட்டை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
சூடான-மாற்றக்கூடிய முறையில் தன்னியக்கமாக பேட்டரியை மாற்றும் உலகின் முதல் அமைப்பை இந்த மனித உருவ ரோபோ கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ரோபோவை மூடாமல் அல்லது மனித உதவி தேவையில்லாமல் அதன் பேட்டரிகளை மாற்ற அனுமதிக்கிறது. இத்தகைய தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சார்ஜிங் செயலிழப்பு காரணமாக பணி இடையூறுகளைத் தடுக்கிறது. மேலும்,பராமரிப்புப் பணிச் செலவுகளைக் குறைத்து,ஒட்டுமொத்த உற்பத்தி செயல்திறனை மேம்படுத்துகின்றது.
உற்பத்தி வரிசைகளில் ரோபோக்களின் பயன்பாடு தொழிற்சாலைகளின் தானியங்கி மேம்படுத்தலின் வேகத்தை துரிதப்படுத்துகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து,பல சீன மனித உருவ ரோபோ நிறுவனங்கள் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளன. தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான ரோபோக்கள் அனுப்பப்படுகின்றன. வாகன உற்பத்தி மற்றும் மின்னணு உற்பத்தி போன்ற துறைகளில் கையாளுதல் மற்றும் தரப் பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளை ரோபோக்கள் முதன்மை பணியாக கொண்டுள்ளன. ஷாங்காயில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் வெளியிடப்பட்ட மனித உருவ ரோபோ துறை குறித்த அறிக்கையின்படி, சீனாவின் மனித உருவ ரோபோ சந்தை அளவு 2024ஆம் ஆண்டில் தோராயமாக 2.76 பில்லியன் யுவான் ஆக இருந்தது.அதே நேரத்தில் 2029ஆம் ஆண்டில் இது 75 பில்லியன் யுவானாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.