சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 4ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனுடன் இணைந்து சீன-பிரான்ஸ் தொழில் முனைவோர் கமிட்டியின் 7ஆவது கூட்டத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர், முக்கிய இன்றியமையாத பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கூட்டாளியாகப் பிரான்ஸ் விளங்குவதாகச் சீனா கருதுகிறது என்றும், சீனப் பாணி நவீனமயமாக்கலில் பிரான்ஸ் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ள வரவேற்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், உண்மையான பலதரப்புவாதத்தை இரு நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். உலகளாவிய ஆட்சிமுறையின் மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்துக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அரசுகள் மற்றும் தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 150பேர் இந்த நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
