‘BRICS 2026’ உச்சி மாநாடு: ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் டெல்லி வருகை  

Estimated read time 1 min read

இந்தியாவில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் புதுடெல்லி வரவுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய அதிபரின் இந்த இந்திய வருகை உலகளவில் பெரும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தலைமையில் புதுடெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

You May Also Like

More From Author