நிலா விழாவைக் கொண்டாடும் போது, பூமிக்கு வெளியே சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீன விண்வெளி நிலையத்தில் சென் ச்சோ 20ஆவது விண்கலனிலுள்ள சென் துங், சென் ச்சுங்ருய், வாங் சியே ஆகிய மூன்று சீன விண்வெளி வீரர்கள், தங்களுடைய தனிச்சிறப்பான நிலா விழா உணவுகளைக் காட்டி, சீன மக்களுக்கு நிலா விழா வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தூரமான விண்வெளி வீட்டில் இருந்த போதிலும், தாய்நாட்டை நினைக்கிறோம். சீனாவின் விண்வெளி நிலையத்திலிருந்து அனைவருக்கும் நிலா விழா நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம். அனைவரும் குடும்பத்தினர்களுடன் இணைந்து ஆரோக்கியமாகவும் நலவாழ்வாகவும் இனிமையாகவும் வாழ வேண்டும் என்றார்.
