சீனாவின் சி ட்சாங்கிற்கு பேருந்தில் சுற்றுலா பயணம் எனும் நிகழ்வு துவங்கியது

“சீனாவின் சி ட்சாங்கிற்கு பேருந்தில் சுற்றுலா பயணம்” எனும் பெரிய அளவிலான ஊடக நிகழ்வின் துவக்க விழா அக்டோபர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறை துணை தலைவரும் சீன ஊடக குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் இதில் கலந்து கொண்டார்.


சீன ஊடக குழுமத்தின் தொகுப்பு விவகாரக் குழு உறுப்பினர் பெங் ஜியன்மிங் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், சி ட்சாங் பற்றி மேலும் ஆழமாக அறிந்து கொண்டு, புதிய யுகத்தில் ஒற்றுமை, செல்வம், நாகரீகம், உயிரின வாழ்க்கை சூழல் தொடர்பான சி ட்சாங்கின் கதைகளை நன்றாக பரவல் செய்வது, இந்நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.


அக்டோபர் 11ஆம் நாள் தொடங்கிய இந்நிகழ்வு, 14 நாட்கள் நீடிக்கும். நேரலை மற்றும் காணொலி நிகழ்ச்சிகளின் மூலம் இணைய ரசிகர்களுக்கு சி ட்சாங் சுற்றுலாவின் புதிய நெறியை அறிமுகப்படுத்தி, சி ட்சாங்கின் இயற்கை காட்சிகள், வரலாறு மற்றும் பண்பாடு, தேசிய இன பழக்க வழக்கங்கள், இணக்கம் மற்றும் திறப்பு ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்தி, சி ட்சாங் சுற்றுலாவின் மீதான மக்களின் ஆர்வத்தை மேலும் உயர்த்தி, சி ட்சாங் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் உயர் தர வளர்ச்சிக்கும் பண்பாட்டு பரிமாற்றத்துக்கும் புதிய இயக்காற்றலை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author