தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை 

இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

தூர்தர்ஷனின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

தூர்தர்ஷனின் ஆங்கிலச் செய்திச் சேனலான DD நியூஸ், சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புதிய விளம்பர வீடியோவைப் பகிரும் போது தனது புதிய லோகோவை வெளியிட்டது.

“எங்கள் கொள்கைகள் அப்படியே இருக்கிறது. ஆனால், தூர்தர்ஷன் இப்போது புதிய அவதாரத்தில் கிடைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள்..

. புதிய DD செய்திகளை அனுபவியுங்கள்” என்று ட்விட்டரில் DD நியூஸ் கூறி இருந்தது.

You May Also Like

More From Author