கேரளாவில் அக். 26-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Estimated read time 0 min read

கேரளாவில் வரும் 26ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நாளை மறுநாள் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைக் கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author