நெல்லையில் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி! 15-வது வார்டு கவுன்சிலர் அஜய் தவெகவில் ஐக்கியம்

Estimated read time 1 min read

திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில், அக்கட்சியின் கவுன்சிலர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் அஜய். இவர் இன்று நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். கவுன்சிலர் அஜய்க்கு, எம்.எல்.ஏ. ஆர்.எஸ்.முருகன் சால்வை அணிவித்து கட்சியில் வரவேற்றார். கடந்த சில மாதங்களாகவே நெல்லை மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தவெக-வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு மாநகராட்சி கவுன்சிலரே தவெக-வில் இணைந்திருப்பது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக-வின் பலத்தை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து கவுன்சிலர் அஜய் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தவெக-வில் இணைந்துள்ளேன். இனி மக்கள் பணியை தவெக மூலம் தொடர்ந்து செய்வேன்” என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author