மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்களுக்கு விடுமுறை

Estimated read time 1 min read

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை ஆகியவற்றை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நிகழ்வான முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தேவர் குருபூஜை நிகழ்வில் விஜய் கலந்து கொள்வதால், இந்த நிகழ்வுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை ஆகியவற்றை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் செயல்படாது எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author