சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்றும் விலை 1400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,04,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14247 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 225 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,25,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
