ஷி ச்சின்பிங் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவர் ஷி ச்சின்பிங், வட கொரிய தொழிலாளர் கட்சி பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜாங் உன்னுடன் 8ஆம் நாள் பிற்பகல் பியோங்யாங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், இப்பயணத்தை வாய்ப்பாக கொண்டு, புதிய யுகத்தில் சீன-வட கொரிய உறவுக்கான உயர்மட்ட வடிவமைப்பு மற்றும் உத்திப்பூர்வ வழிகாட்டலை வலுப்படுத்தவும், இருநாட்டு உறவின் பெரும் வளர்ச்சியை மேம்படுத்தவும், கிம் ஜாங் உன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

உலகில் மாற்றங்கள் விரைவாக ஏற்பட்டு வரும் நிலையில், இருதரப்பும் சீன-வட கொரிய பாரம்பரிய நட்புறவில் புதிய யுக அர்த்தங்களையும் வலுவான ஆற்றலையும் வழங்க வேண்டும் என்றும், இருநாட்டு சோஷலிச லட்சியத்துக்கும் பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீன-வடகொரிய உறவை வளர்ப்பது குறித்து, உயர்மட்ட பரிமாற்றங்களை வழிகாட்டலாகக் கடைப்பிடித்து, அரசியல் பரஸ்பர நம்பிக்கையின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு பயனளிப்பதை இலக்காக கடைப்பிடித்து நடைமுறை ஒத்துழைப்பின் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும், நட்பைத் தொடர்தலை உந்து சக்தியாக கடைப்பிடித்து, மக்களுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்றும், நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடித்து, உத்திப்பூர்வ ஒத்துழைப்பின் அர்த்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

கிம் ஜாங் உன் கூறுகையில், வட கொரியா ஒரே சீனா கொள்கையைக் கடைப்பிடித்து, முக்கிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை உறுதியாக ஆதரிக்கும் என்றார். வட கொரியா இருநாட்டு உறவின் வளர்ச்சியை நாட்டின் மிக முக்கியமான முதன்மை உத்திநோக்கு லட்சியமாக கொண்டு, பிரதேச மற்றும் உலகின் அமைதி மற்றும் செழிப்புக்கு சீனாவுடன் இணைந்து பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author