தமிழகத்தில் ஒப்பந்ததாரர் பதிவு முறை 6 அடுக்கில் இருந்து 4 அடுக்காக மாற்றம்: பொதுப்பணித்துறை அரசாணை வெளியீடு!

Estimated read time 1 min read

பொதுப்பணித்துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த 6 அடுக்கு ஒப்பந்ததாரர் பதிவு முறை. இனி எளிமையான 4 அடுக்கு முறையாக மாற்றப்படுவது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஒப்பந்ததாரர் பதிவு முறையில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய ஒப்பந்ததாரர் வகைப்பாட்டின்படி, ரூ.10 கோடிக்கு மேல் பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-1 ஒப்பந்ததாரர்கள் உத்தரவாத தொகையாக ரூ.1.5 கோடி சொத்து மதிப்பு வழங்க வேண்டும். ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-II ஒப்பந்ததாரர்கள் ரூ.75 லட்சம் உத்தரவாதத்தொகை வழங்கினால் போதும். ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-III ஒப்பந்ததாரர்கள் ரூ.15 லட்சத்தை உத்தரவாதத்தொகையாக கட்டினால் போதும்.

மேலும், ரூ.1 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளும் வகுப்பு-IV ஒப்பந்ததாரர்கள் 15 சதவீத சொத்து மதிப்பு அல்லது அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் மட்டும் கட்டினால் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களுக்கு. ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 15 சதவீத மின்னணு வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய பதிவு மற்றும் தர உயர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், பதிவு கட்டணம் ரூ.1 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று, ஒரு நபர் அல்லது நிறுவனம் ஒரே பிரிவில் ஒரு பதிவு மட்டுமே வைத்திருக்க முடியும். உரிமையாளர் அல்லது பங்குதாரர் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். போலி அல்லது பினாமி பதிவுகளை தவிர்க்க, கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அனுபவம். ஜி.எஸ்.டி. மற்றும் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் சரிபார்க்கப்படும். இதற்காக நிகர மதிப்புச் சான்றிதழ், வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் விதிமுறைகளை மீறினால் அல்லது பணிகளைச் சரியாகச் செய்யத் தவறினால், என்ஜினீயர்கள் குழுவின் பரிந்துரைப்படி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்கள் ‘இ-சேவை’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பணிகளை சரியாகச் செய்யாதது. போலி ஆவணங்கள், வரி செலுத்தத் தவறுதல், தரமற்ற பொருட்கள் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடைக்காலம் முடிந்தவுடன் தானாகவே அந்தத் தடை நீங்கியதாகக் கருதப்படும்.

தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் இந்தத் தடையால் பாதிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author