நீலகிரியை புரட்டி போட்ட கனமழை… 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வராதீங்க.. கலெக்டர் எச்சரிக்கை..! 

Estimated read time 1 min read

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையின் காரணமாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மலைப்பாதை முழுமையாக முடங்கி, போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான பாதிப்புகளைத் தொடர்ந்து, இவ்வழியாகச் செல்லக்கூடிய வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே மண் சரிவில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் தீவிரப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நீலகிரியில் தொடர் மழை நீடித்து வருவதால், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் ஊட்டி செல்வதை முழுமையாகத் தவிர்த்திடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் தொடர் மழையினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மலைப்பாதைப் பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author