வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கூடுதல் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் முகவரி பிரிவுக்கு நேரடியாக மனு அனுப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகத் தலைவர் அல்லது துறைத் தலைமை வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே மனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி நேரடியாக மனு அளிப்பதோ, வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால், நடத்தை விதி 18-ன் கீழ் விதிமீறலாகக் கருதப்பட்டு, தமிழ்நாடு குடிமைப் பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
