சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களின் கடிதத்திற்கு பதிலளித்து, சீன வசந்த விழாவின் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், 41 ஆண்டுகளுக்கு முன் அயோவாவில் பயணத்தின் இன்பமான நினைவுகள் இன்னும் மனதில் தெளிவாக உள்ளன என்றார். நிலைமை எப்படி மாறினாலும், சீன-அமெரிக்க பொது மக்களுக்கு இடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான விருப்பமும், இருநாட்டு இளைஞர்களுக்கு இடையிலான நட்புறவும் மாறாது. நீங்கள் இருநாட்டு பொது மக்களிடையிலான நட்புறவை ஊக்குவித்து, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு மேலதிக பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக, அயோவாவைச் சேர்ந்த நண்பர் பெல்லன் ஷி ச்சின்பிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், அயோவாவில் உள்ள நண்பர்களின் சார்பில் சீன வசந்த விழாவுக்கான வாழ்த்துகளை ஷி ச்சின்பிங்கிற்கும் அவரது மனைவி பேராசிரியர் பெங் லியுவானுக்கும் தெரிவித்தார்.
