SIR குறித்து தவறாக பிரச்சாரம் செய்யும் எதிர்க்கட்சியில் சதித்திட்டத்தை முறியடிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி, “அக்டோபர் 22 முதல் நவம்பர் 5 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடம் எடுத்துச் சென்று எதிர் கட்சிகளின் அராஜக ஆதிகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம்.இதன் ஒரு பகுதியாக நம் தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களை எடுத்துச் சொல்ல உள்ளோம்.தமிழ்நாடு முழுவதம் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி மதுரை கோவை சென்னை தஞ்சாவூர் செங்கல்பட்டு உள்ளிட்ட 8 முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம். ஒவ்வொரு பாத யாத்திரையிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெறுவார்கள் இந்த பாத யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் நடத்தும் அராஜக போக்கு குறித்து மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்” என்றார்.
