தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுக்கு புதிய தலைவர்!

Estimated read time 1 min read

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அக்டோபர் 23-ந் தேதி)வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் புதிய தலைவராக ஆர்.செந்தமிழ்செல்வனும், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைவராக அசோக் குமார் பகத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர் ராஜேந்திர பால் கவுதமும் அக்டோபர் 23-ந் தேதியிட்டு மற்றொரு நியமனக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் செயல் தலைவர்களாக ஆர்.கலைச்செல்வன், பி.வி.தமிழ்செல்வன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவு தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன் குமார், காங்கிரஸ் கட்சியின் தேசிய எஸ்சி பிரிவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் இப்புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author