சென்னை உள்பட தமிழகத்தில் இன்று இரவு மழை எப்படி இருக்கும்?

Estimated read time 0 min read

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இன்று இரவு திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மலைப் பகுதிகள்

ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன்மலை, ஜவ்வாது மலைப் பகுதிகளில் தீவிர மழைக்கு வாய்ப்பு.

காவிரி டெல்டா

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

மேற்கு தமிழக மலைப் பகுதிகள்

நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குன்னூர் பகுதியில் நிலச்சரிவு அபாயம்.

தென் தமிழகம்

கன்னியாகுமரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குமரி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை

இரவு முதல் அதிகாலை வரை மழை அதிகரிக்கக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author