“2 வயசுல இவ்வளவு பெரிய சாதனையா….?” 12 தாளங்களை மனப்பாடமாக வாசித்து தபலா வாத்தியத்தில் மிரட்டிய சிறுமி…. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ….!! 

Estimated read time 0 min read

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் ஹோன்னாவராவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற 2 வயது 10 மாத குழந்தை, தபலா வாசிப்பில் புதிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தச் சிறிய வயதிலேயே தபலாவில் 12 தாளங்களை மிகத் துல்லியமாக உச்சரித்து வாசித்து ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய பாரம்பரிய இசையில் ‘தாளம்’ என்பது மிகக் கடினமான அமைப்பாகும். தாளத்தின் சொற்களைக் வாயால் சொல்லிக்கொண்டே, அதே நேரத்தில் கைகளால் தபலாவில் தாளத்தை சரியாக வாசிப்பது என்பது பல வருடப் பயிற்சிக்குப் பிறகே சாத்தியமாகும். ஆனால், மூன்று வயதைக் கூட எட்டாத இந்தச் சிறுமி அதை மிக எளிதாகச் செய்து காட்டியுள்ளார்.

குழந்தையின் இந்த அபாரத் திறமை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுமி ஸ்வர்ஸ்ரீயின் கைகளின் வேகத்தையும், தாளத்தின் மீதுள்ள கவனத்தையும் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“சரஸ்வதி தேவியின் அருள்பெற்ற அற்புதக் குழந்தை” என்றும், குழந்தைக்கு இசையோடு தொடர்புடைய ‘ஸ்வர்ஸ்ரீ’ என்று பெயர் வைத்த பெற்றோர் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என்றும் இணையத்தில் பலரும் மனதாரப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிறு வயதிலேயே கிடைக்கும் முறையான பயிற்சியும், குடும்பத்தின் ஆதரவும் இருந்தால் எப்பேர்ப்பட்ட திறமையையும் வளர்க்க முடியும் என்பதற்கு இந்தச் சிறுமியே சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்வர்ஸ்ரீயின் இந்த சாதனை கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கே பெரும் பெருமையைச் சேர்த்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author