வங்கியின் பணப் பரிவர்த்தனை கவுண்ட்டரில் வாடிக்கையாளருக்கும் எஸ்பிஐ வங்கி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு முன்னதாகப் படிவம் கொடுத்தவருக்கு சேவை செய்யாமல், பின்னாடி வந்தவருக்குப் பணத்தை வாங்குவதாகக் கூறி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதற்கு வங்கி ஊழியரோ, “பணத்தை எண்ணிச் சரிபார்த்து தான் வாங்க முடியும், உணவருந்தும் இடைவேளை நேரத்திலும் உங்களுக்குச் சேவை செய்ய முயல்கிறோம்” எனப் பதில் அளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அந்த வாடிக்கையாளர் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிப்பேன் என்று கூற, “நீங்கள் எங்க வேணும்னாலும் புகார் கொடுத்துக்கோங்க” என்று ஊழியர் பதில் கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, “சின்ன பண நோட்டுகளை வாங்க வங்கி ஊழியர்கள் தாமதிக்கக் கூடாது” என ஒரு தரப்பினரும், “ஊழியர்களுக்கு உணவு இடைவேளையும் பணத்தை எண்ண நேரமும் தேவை” என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் ஆர்பிஐ விதிகளின்படி, ₹50, ₹100 போன்ற குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வாங்க வங்கிகள் மறுக்கக் கூடாது. அதேபோல, வாடிக்கையாளர் சேவை நேரத்தின் போது உணவு இடைவேளைக்காகக் ரொக்கக் கவுண்ட்டர்களை மூடாமல், மாற்று ஊழியர்களை நியமித்து இடைவிடாத சேவையை வங்கிகள் வழங்க வேண்டும் என்பது விதியாகும்.
SBI बैंक में खुले पैसे जमा करने पहुंचे ग्राहक को कर्मचारी ने मना कर दिया! इसके बाद बैंक कर्मचारी और ग्राहक के बीच तीखी बहस हो गई। आखिर बैंक में खुले पैसे जमा करने को लेकर क्या हैं नियम? https://t.co/O0fYe2xVt0
— छपरा जिला
(@ChapraZila) October 25, 2026
“>
இருப்பினும், வங்கிகளில் போதிய ஊழியர்கள் இல்லாததே இதுபோன்ற வாக்குவாதங்களுக்கும் தாமதங்களுக்கும் முக்கியக் காரணம் என்பதால், வங்கி நிர்வாகமும் ரிசர்வ் வங்கியும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

