நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசர் உலகாம்பிகை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்து ராஜகோபுர கலசம் உட்பட திருக்கோவில் முக்கிய கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் இரா சுகுமார், காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், மணிமுத்தாறு
சிவன் பாபு, கல்லிடை பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி,
துணைத்தலைவர்
இசக்கி பாண்டி,
அம்பை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரணி சேகர் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாபநாசம் திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்
பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.