முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

Estimated read time 1 min read

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை அமைந்தக்காரயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர். திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி,பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author