டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கூட்டணி கணக்கு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
