33வது யாங்லிங் வேளாண் உயர் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வேளாண் கண்காட்சி, 25ஆம் நாள் ஷாஆன்சி மாகாணத்தில் தொடங்கின.
இக்கண்காட்சியில் முதன்முறையாக அறுவடைச் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வேளாண் ரோபோக்கள், ஏஐ பெரிய மாதிரிகள் உள்ளிட்ட புதிய உயர்தர உற்பத்தி ஆற்றலின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இக்கண்காட்சியின் போது, அறிவார்ந்த வேளாண்மை உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட சீனாவின் புதிய வேளாண் தொழில்நுட்ப சாதனைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
நடப்பு கண்காட்சியின் போது 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வேளாண் கண்காட்சியும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரங்கம் முதன்முறையாக தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
