“முதல் படம் ஃபிளாப் ஆனா என்னப்பா… இப்போ ரசிகர் மன்றமே ஆரம்பிச்சாச்சு” ஜேசன் சஞ்சயின் வைரல் பேனர்….!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் எப்போதும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராக ஜேசன் சஞ்சய் உருவெடுத்துள்ளார்.

ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தலைவரின் மகனான இவர், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ‘சிக்மா’ என்ற திரைப்படம் எதிர்பாராத விதமாகத் தோல்வியைச் சந்தித்தது. எனினும், அந்தத் தோல்வியால் சற்றும் தளராமல், முன்னணி வணிக நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தமாகி விளம்பர உலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் விரைவில் நடிகர் மற்றும் இயக்குநர் சஞ்சீவ் இயக்கத்தில் புதிய கதாநாயகனாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் செய்தி வெளியானது முதலே அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் வைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

”சேலம் மாவட்ட தலைமை ஜேசன் சஞ்சய் ரசிகர் மன்றம்” என்று குறிப்பிட்டு வைக்கப்பட்ட அந்தப் பேனரைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். படம் தோற்றாலும் சஞ்சய்க்கான தனி நபர் செல்வாக்கும் ரசிகர் பட்டாளமும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த பேனர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author