கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Estimated read time 0 min read

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக டோபிகானல் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள டோபிகானல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இரவு பெய்த கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளானதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீரோடைப் பகுதிகளில் தனியார் கட்டடங்களின் ஆக்கிரமிப்பு, குப்பைகள் மற்றும் புதர்ச்செடிகள் காரணமாக மழைநீர் தேங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகள் மற்றும் புதர்களை அகற்றி, மழைநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author