“அன்பில் மகேஷை கைது செய்து அலைக்கழிக்கிறாங்க” – போலீஸ் உடன் சேகர்பாபு வாக்குவாதம்

Estimated read time 0 min read

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனை முடிந்து அன்பில் மகேஷ் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டதால், அங்கு திரண்ட சேகர்பாபு, திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய பதில் அளிக்காமல் மாற்றி மாற்றி பேசுவதாகக் கூறி சேகர்பாபு உள்ளிட்ட திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்து நீதிபதியிடம் அழைத்து செல்லாமல் அன்பில் மகேஷ் அலைக்கழிக்கப்படுகிறார். சட்டத்திற்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக போலீஸ் சுற்றிச் சுற்றி அழைத்து சென்று அலைக்கழிக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. தவெக அரசு நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, சட்டத்தையும் மதிப்பதில்லை. தவெக அரசு எல்லை மீறி செல்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author