அக். 29 வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

Estimated read time 1 min read

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஊட்டி மலைரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு விழுந்தும் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் ஊட்டி மலைரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது தண்டவாள பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தண்டவாளங்களில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்புப் பணிகள் காரணமாக 3-வது நாளாக இன்று மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மலை ரெயில் சேவை வருகிற 29ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author