டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்ததால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தலைநகருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, வானம் மேகமூட்டமாகக் காணப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 102-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் பிளைட்ரடார்24 தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற சாலை, கான்நாட் பிளேஸ், எய்ம்ஸ், ஐடிஓ, ஆர்.கே.புரம் மற்றும் பிரோஸ்ஷா சாலை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.
எய்ம்ஸ் மேம்பாலப் பகுதியில் தேங்கிய நீரால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: IMD ரெட் அலர்ட் எச்சரிக்கை
