பிபிசிக்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
ஜனவரி 6, 2021 அன்று அவர் ஆற்றிய உரையை திரித்து காட்டியதாக கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 80,000 கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிபிசியின் ‘பனோரமா’ (Panorama) நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் பகுதிகள் “வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் நோக்குடன் மற்றும் ஏமாற்றும் விதமாகத் திரிக்கப்பட்டுள்ளன” என டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

You May Also Like

More From Author