பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த முதலமைச்சரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, நந்தனம் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த தேவர் சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ராஜ்மோகன், மரிய வில்சன், விக்னேஷ், வெங்கட் ரமணன், ஸ்ரீநாத், குமார், பார்த்திபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
