தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நடராஜன், தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாலட்சுமி, ஷபீர், மீனா மற்றும் மகாலிங்கம் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் குறித்து அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
