தமிழக முதலமைச்சர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் ராஜசேகரன் என்பவரின் மனைவி அமல் ராஜசேகரன் (82) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார்.
இந்தச் செய்தி அறிந்ததும், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தனது பெரியம்மா அமல் ராஜசேகரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
முன்னதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது பெரியம்மா இல்லத்தின் முன்பு தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டனர்.
