“6 ஓவர்ல 109 ரன்!” – பாகிஸ்தானுக்குப் பேரதிர்ச்சி கொடுத்த யுஏஇ… ஹாங்காங் சிக்ஸர்ஸில் சொதப்பிய நடப்பு சாம்பியன்..!!! 

Estimated read time 1 min read

ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே ஐக்கிய அரபு அமீரக (UAE) அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஹாங்காங்கில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

ஆறு ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் கேப்டன் அப்பாஸ் அஃப்ரிடி வெறும் 13 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்து மிரட்டினார். அவருக்குத் துணையாக அப்துல் சமத் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, கடைசி பந்தில் 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துப் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

“>

யுஏஇ அணியின் கேப்டன் காலித் ஷா வெறும் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 9 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 71 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஜாஹித் அலியும் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அஃப்ரிடி, அப்துல் சமத் மற்றும் இர்பான் கான் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author