உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் புனித யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று, நடுவானில் திடீரென மாயமாகி விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட மொத்தம் 6 பேர் பயணித்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பாதை தெரியாமல் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து, அது விழுந்து நொறுங்கியிருக்கக் கூடும் என்ற பலத்த சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரின் தற்போதைய நிலை என்ன, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து நடந்ததாகக் கருதப்படும் அடர்ந்த மலைப் பகுதியை நோக்கி மீட்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.
