முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் மரியாதை!

Estimated read time 1 min read

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் அர்லேகர், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் முத்துராமலிங்க தேவர் என புகழாரம் சூட்டினார்.

தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன் ராஜா, ராஜீவ் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author