லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

Estimated read time 0 min read

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2 ஆயிரத்து 538 உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனத்தில் சுமார் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் கே.என்.நேரு மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குப்பதிவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திருச்சியில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளதால், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author